Tuesday, December 29, 2009

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?


இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.

இந்த
Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில்
இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும்.

இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம்


முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்

பின்
PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ
தேயைப்படும் இடத்தில் PowerPoint இல் authorSTREAM என்ற tab ஐக் click
செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக்
கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.

அப்போது
authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்களுக்கான வீடியோவைத் தேடி
பட்டியலிடும் அதில் உங்களுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும்
பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப்
பார்த்துவிட்டு Insert பண்ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப்பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

அதே
போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து Image
என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை
Insert பண்ணிக் கொள்ள முடியும்.

நீங்கள்
authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உருவாகிய PowerPoint
Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் .
நன்றி :தமிழ் டெச்
மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com/desktop/

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------