வைரஸ்கள் மட்டுமே தொல்லை தந்து கொண்டிருந்த நேரத்தில், நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்காகவென்றே உருவாக்கப்பட்டு உலவ விடப்பட்டவை தான் ஸ்பைவேர் புரோகிராம்கள். இதனை மால்வேர் எனவும் சிலர் கருதி வகைப்படுத்துகின்றனர்.
இவை நேரடியாகக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பிரச்சினை செய்யாது என்றாலும், நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடுவதில் ஈடுபடுகின்றன. இவற்றை வடிவமைத்தவர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட்டு நம் பெர்ச்னல் வாழ்க்கையில், நம் பேங்க் நிதி பரிமாற்றங்களில் கெடுதல் செய்கின்றன.
எனவே இவற்றை அவ்வப்போது நீக்குவதற்கு நமக்கு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.
இணையத்தில் பல இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்த நபர்களின் எண்ணிக்கையை வைத்து, மிகப் பிரபலமான சில புரோகிராம்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
AdAware Free
தொடர்ந்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம் இது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 8.1.1. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 89198 கேபி.
சென்ற வாரம் வரை இதனை 1,59,34,537 பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருவதாக இதன் இணைய தளத்தில் தகவல் உள்ளது. இந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் லாவா சாப்ட் (Lava Soft).
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
Spybot Search & Destroy
சேபர் நெட்வொர்க் கிங் (safernetworking) என்னும் நிறுவனம் இதனைத் தயாரித்து வழங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய பதிப்பு 1.6.2. ஆகும். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்குகிறது. இதனை இயக்க பெண்டியம் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சிப் இருந்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் 100 எம்பி இதற்கெனத் தேவை. இதன் பைல் அளவு 16026 கேபி. இறுதியாக மே 20 அன்று புதுப்பிக்கப்பட்டது. சென்ற வாரம் வரை 85,42,006 பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.இலவசமாக இதனை டவுண்லோட் செய்திடலாம்.

சி.டபிள்யூ. ஷ்ரெடர் (CW Shredder)
இதன் பெயர் பைலை மற்றவர் படிக்க முடியாமல் அழிக்கும் தன்மையுடையதாகத் தெரிந்தாலும், இதுவும் ஆண்ட்டி ஸ்பைவேர் பைல் வகையைச் சேர்ந்ததுதான். இது பிரபலாமவதற்குக் காரணம், ஸ்பை ஸ்பாட் மற்றும் ஆட்–அவேர் ஆகிய இரு புரோகிராம்களும் நீக்க முடியாத ஒரு ஸ்பைவேர் புரோகிராமினை இது நீக்கியதுதான். ஆனால் இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படவில்லை ; இருந்தாலும் மிகச் சிறப்பாக இயங்கி தன் பணியைச் செய்கிறது.

விண்டோஸ் டிபெண்டர் (Windows Defender)
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கு பெயர் பெற்ற, பிரபலமான ஏ.வி.ஜி. நிறுவனத் தயாரிப்பு. பொதுவாக ஸ்பைவேர் புரோகிராம்கள் நமக்குத் தெரியாமல் ஸ்டார்ட் அப் புரோகிராமாக நம் கம்ப்யூட்டரில் இடம் பெற்று, நாம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன் தானும் இயங்கி, தன் ஸ்பை வேலையைத் தொடங்கும். எனவே ஸ்டார்ட் அப்புரோகிராம்களின் மீது கண் வைத்துக் கண்காணித்தால், பெரும்பாலான ஸ்பைவேர் புரோகிராம்களை முடக்கிவிடலாம். விண்டோஸ் டிபெண்டர் அதைத்தான் செய்கிறது. லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்பைவேர் கார்ட் (SpywareGuard)
முதலில் இதனை பிரவுசர் ஹைஜாக் ப்ளாஸ்டர் என்ற பெயரில் அழைத்தனர். இதனை கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். ஐந்து லட்சம் பேருக்கு மேல் இதுவரை இதனை டவுண்லோட் செய்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களுடன் இன்னும் சில புரோகிராம்களும் இணையத்தில் இலவசமாய்க் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சில ஸ்பைவேர்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டவை. அந்த ஸ்பைவேர் இருப்பதாகத் தெரிந்தால், அவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். அல்லது அவற்றை டவுண்லோட் செய்து ஒருமுறை இயக்கி நீக்கலாம்.

No comments:
Post a Comment