Saturday, January 2, 2010

கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

கொடி பிடித்து வந்த புலிகளை ஆமி சுட்டது பொன்சேகா அணி திடுக்கிடும் தகவல்

இறுதி யுத்தத்தின் இறுதி நாளில் இராணுவத்தினரிடம் வெள்ளை கொடியை
பிடித்தவாறு சரண் அடைய வந்த புலிகளின் முக்கிய மூன்று சிறப்பு தளபதிகள் உட்பட
இரு நூறு புலிகளை இராணுவம் கொடூரமாக சுட்டு கொன்றது என முன்னாள் இராணுவ தளபதியும்
இந்நாள் சனாதி பதி வேட்பாலருமாகிய பொன்சேக அணியினர் இந்த திடுக்கிடும் தகவலை
தெரிவித்துள்ளனர் .



எதிர்கட்சியின் முக்கிய அமைச்சரான அஸ் பீ திசநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

இந்த தாக்குதல்களின் போது பதினேழு இராணுவத்தினரும் பலியானதாக
மேலும் தெரிவித்துள்ளார் .இவர்களின் இந்த திடுக்கிடும் தகவலை அடுத்து மகிந்தா
வட்டாரம் பெரும் கலக்கம் அடைந்துள்ளாதாக தெரிய வந்துள்ளதுடன் .

மகிந்த எதிர் வரும் தேர்தலில் தோல்வி அடைவார் என மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது
குறிப்பிட தக்கது.

இந்த மாதம் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரங்களை அடுத்து பல முக்கிய இறுதி கட்ட போர் தொடர்பான மர்ம முடிச்சுக்கள் அவிழும் என எதிர்பார்க்க பட்ட வேளை தற்போது இந்த உண்மை வெளியாகியுள்ளது .அத்துடன் அந்த இறுதி கட்ட போரின் போது அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்ததுள்ளனர்
என ஸ் பீ திசநாயக்க தெரிவித்துள்ளார் .இதற்கு மகிந்த அணி என்ன விளக்கம் சொல்லும் என்பதனை பொருது தான் மிகுதி விடயங்கள்
பொன் சேகா அணியினரால் வெளியாகும் என அர்திர்பார்க்க படுகின்றது

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------