உங்களுடைய ஆதங்கம் நிறைவேறுகிறது. தமிழ் குழந்தைகள் எம்மொழி பேசினாலும் முதலில் தமிழன் என அடையாளப்படுத்துவது அவர்களுடைய பெயரே ஆகவே இதனை கருத்துள் கொண்டே உலகத்தமிழ்இணையம் தமிழ் பெயர்களை இலகு வடிவில் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குழந்தைகழுக்கான தூய தமிழ் பெயர் என்னும் பகுதியை உருவாக்கி வருகின்றது. தற்போது முடிவடைந்துள்ள பகுதிகளை நீங்கள் காணலாம்.
http://www.worldtamilweb.com/engaltamil/tamilnames/thujatamilpayar.html
நன்றி
Regards
அன்பான தமிழ் உறவுகளே.
எமது இனமானது பலநூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்தது உண்மைதான். தொடர்ந்து அடிமைப்பட்டிருந்ததாலும் மேலைத்தேய நாகரீகமே சிறந்தது என்ற கருத்து எம்மவர் மத்தியில் வேரூன்றிவிட்டதனாலும் நாம் மெது மெதுவாக எமது விலைமதிப்பற்ற பண்புகளை கைவிட்டு அந்நிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதுடன் எமது வாழ்க்கையில் பல தேவையில்லாத பிரச்சினைகளையும் வலிந்து உருவாக்குகின்றோம். ஆழ்ந்து சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும். இக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்குப் பலருக்கு கஸ்டமாகவிருக்கலாம், ஏன் மூடக்கருத்தாகவும் தோன்றலாம். ஆனால் அவற்றைக் கடைப்பிடித்துப் பார்த்தீர்களானால் அவற்றிலுள்ள மகத்துவத்தை அனுபவிக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் நாம் யார் என்பதை அறிந்து புரிந்துகொண்டு வாழ்ந்தோமானால் நமக்கு மட்டுமல்ல நமது எதிர்காலச் சந்ததிக்கும் பயன்படும். நாம் நமது எதிர்காலச் சந்ததிக்குப் பணத்தைமட்டும் சேர்த்து வைத்தால் போதாது, அதை அவர்கள் அனுபவிக்க வேண்டுமானால் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். எனவே பெற்றோர்களின் மிகப் பெரிய பொறுப்பு தம் பிள்ளைகளுக்கு நலமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டவேண்டும். அந்நியப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை நாம் கடைப்பிடிப்பதில் தப்பில்லை. நாம் அப்படியா செய்கின்றோம்? அல்லல்களைக் கொணரும் பழக்க வழக்கங்களையல்லவா கடைப்பிடிக்கின்றோம். நாம் எமது மூதாதையர்கள் அனுபவிக்காத அளவுக்கு வசதிகளை அனுபவிக்கின்றோம். அதுமட்டுமல்ல அவர்களிலும்பார்க்க மிகுந்த பொருளாதார வசதிகளுடன் வாழ்கின்றோம். ஆனால் அவர்களிடம் காணப்பட்ட மன அமைதி எம்மிடம் இருக்கின்றதா? ஏன்? ……. சிந்தியுங்கள் எதை தொலைத்தோம். என்னத்தைத் தவறவிட்டோம் என்று.
எமக்கென்று எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. தற்போது பலர் தம் குழந்தைகளுக்கு சிறிய நவின பெயர் வைக்கின்றோம் என்று ஏதேதோ பெயர்கள் வைப்பதைக்காண்கின்றோம். உ–ம் டிலக்ஷன், பிறண்டன், டிலானி, நிலானி, சர்லா, மிர்லா என என்று நமக்கும் தெரியாத, குழந்தைக்கும் புரியாத அர்த்தத்தில் நாம் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து மகிழ்கின்றோம். முருகா, செல்வன், செல்வி, தமிழ், அரசி போன்று எத்தனையோ அர்த்தம் நிறைந்த பெயர்கள் இருக்கும்போது நாம் எதையோ தேடுகின்றோம். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கருத்து நிறைந்த பெயர்களை வைத்து அவர்களை அழைத்துப்பாருங்கள். முருகா அல்லது கடவுள் என்று பெயரை வைத்து அந்தக் குழந்தையை அழைத்துப்பாருங்கள். உங்கள் வீட்டில் தெய்வீகம் தாண்டவமாடும். குடும்பங்களில் இருக்கவேண்டிய அன்பு உங்கள் எல்லோரையும் அரவணைக்கும். உங்களின் தேவைகள் இலகுவாகப் பூர்த்தியாகும். (பேராசையல்ல) எதை நீங்கள் அழைக்கின்றீர்களோ அது உங்களிடம் வந்து சேருகின்றது. தெய்வீகத்தை அழைத்தால் தெய்வீகத்தன்மை உங்களிடம் வந்துசேரும். நீங்கள் ஏதோவொன்றை அழைத்தால் அதுதான் வந்து சேரும். சொற்களிற்குச் சக்தி இருக்கின்றது. இங்கே நான் ஒரு உண்மைச் சம்பவத்தை கூறுகின்றேன். எனது உறவினர் ஒருவர் தனது மகனுக்கு அழகான ஒரு நல்ல பெயரைச் சூட்டியிருந்தார். ஆனால் அவர் தன்மகனை எப்போதும் ‘கள்ளன்’ என்று அழைபதுண்டு. எனது தாயார் அந்த தந்தையை அவ்வாறு அவரது மகனை அழைக்க வேண்டாமெனப் பல தடவைகள் அறிவுரைகள் கூறினார். அந்த தந்தையரர் தனது பழக்கத்தை மாற்றவேயில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து பாராயம் வந்ததும் பொருளாதார வசதி அவர்கள் குடும்பத்தில் இருந்தும்கூட களவில் ஈடுபடத்தொடங்கியது. ஓருமுறையல்ல தொடர்ந்து.
எனவே அழகிய அர்த்தம் பொதிந்த பெயர்களை நம் குழந்தைகளுக்குச் சூட்டி குழந்தைகளின் வாழ்க்கையை வழப்படுத்துவதுடன் நாமும் நமது தனித்தன்மையுடன் வாழ்வோமாக.
நன்றி
தமிழ்.
No comments:
Post a Comment