2010இல் தமிழ் எழுத்தைச் சீரழிக்க முயற்சியா?
http://usetamil.forumotion.com/forum.htmதலைப்பைப்
பார்த்ததும் பலருக்கும் பகீரென்று ஆகியிருக்கும். இப்படி ஒரு செய்தியை
மின்னஞ்சல் வழியாக அறிய நேர்ந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது.
உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு குறித்து உலகத் தமிழ்
அறிஞர்களிடையே பலவகைப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அதன் பின்னணியில்
நிழலாடுகின்ற அரசியலைப் பற்றியெல்லாம் இங்கு நான் எழுத வரவில்லை.
ஆனால்,
இந்த மாநாட்டில் அறிஞர் பெருமக்களைக் கூட்டி, தமிழக முதல்வர் அவர்களின்
தலைமையில் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளதாகச்
செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த மின்மடல்கள் தற்போது உலா
வந்துகொண்டிருக்கின்றன. அப்படியான மின்மடல்கள் சில எனக்கும் வந்திருந்தன.
தமிழ்
செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி
அதிகாரப்படியான அறிவிப்பு செய்யவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக
நடைபெறுவதாக அந்த மின்மடல்கள் தெரிவிக்கின்றன.
தமிழுக்கு
நல்லது செய்வது போல நயவஞ்சகமாகத் தமிழ்மொழியின் எழுத்துகளில் சீரமைப்பு
செய்து தமிழை மெல்ல சீரழிப்பதற்குச் சிலர் தீவிரமாக செயல்படுவதாக எனக்கு
வந்த மின்மடல்கள் எச்சரிக்கை செய்கின்றன.
தமிழுக்கு
எதிராக முளைக்கின்ற எந்தவொரு கீழறுப்புச் செயலையும் முறித்துப்போட்டுத்
தமிழைத் தமிழாக வாழவைக்கும் பொறுப்பும் கடப்பட்டும் தமிழக அறிஞர்களுக்கு
எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத கடமையுணர்வும்
காப்புணர்வும் உலகத் தமிழர்களுக்கும் இருக்கிறது.
எனவே,
தமிழைத் தற்காக்கவும் மீட்டெடுக்கவும் உலகமெங்குமுள்ள தமிழ் அறிஞர்களும்
பற்றாளர்களும் உணர்வாளர்களும் ஏன் ஓட்டுமொத்தத் தமிழர்களுமே அணிதிரண்டு
குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
இந்த உணர்வின் உந்துதலினால், எனக்கு வந்த ஒரு மின்மடலை இங்கே எல்லாருடைய பார்வைக்காகவும் சிந்தனைக்காகவும் வெளியிடுகின்றேன்.
"நெருப்பில்லாமல்
புகையாது" என்பதால் இந்த விடயம் குறித்து பதிவிட துணிந்தேன். இதன்
தொடர்பிலான செய்தி அறிந்தவர்கள் மேலதிக தகவல்களை வழங்குமாறு வேண்டுகிறேன்.
தமிழ்
எழுத்துகளில் செய்யப்படவுள்ள சீர்த்திருத்தங்கள் பற்றிய விவரங்கள் கிழே
இணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைதியாகப் படித்துப் பார்த்து
உடனே செயல்படுமாறு தமிழுறவு தந்த உரிமையில் கேட்டுக்கொள்கிறேன். -(சுப.ந)
**************************
அன்புடையீர்,வணக்கம்.
இது ஒரு அவசர மடல்.
தமிழ்
அறிஞர்களாக நம்பப்படும் சிலர், தமிழ் எழுத்துக்களில் இகர-ஈகார-உகர-ஊகார
உயிர்மெய் வரிசைகளில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் சீர்திருத்தம் என்ற
பெயரில் படுகொலை செய்ய பலகாலமும் முயன்று வந்திருக்கின்றனர்.
நானும் இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மடற்குழுக்களில் வாளாவிருந்து விட்டேன்.
அவர்கள்
கருணாநிதியின் ஆட்சி காலத்திற்குள் அவரை வசப்படுத்தி எப்படியும் செய்து
விட முனைந்து வருகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பன்னாட்டு
அறிஞர்களின் ஆதரவையும் நரித்தனமாகப் பெற்று வருகிறார்கள்.
சிங்கப்பூர்
அறிஞர்கள் ஆதரவு நல்கி விட்டார்கள். தமிழக அறிஞர்களுக்கு முதுகில்
இருப்பது எலும்பல்ல - நீளமான புல்; ஆதாலால் செந்நாப்புலவன் எல்லாரும்
வாயைத் திறந்து அவர்களின் நலனைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
ஆகவே, பன்னாடு தழுவிய எதிர்ப்புக் குரல் இதற்கு எழுப்பப் பட வேண்டும்.
தற்போது செம்மொழி நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டில் எழுத்துச்
சீர்திருத்தத்திற்கு ஆதரவு திரட்டி தீர்மானம் போட முயற்சிகள் எடுத்து
வருகிறார்கள்.
கனடா
பேராசிரியர் செல்வா, தமிழக நண்பர் மணி மணிவண்ணன் ஆகியோரும் மறுப்புக்
கட்டுரைகள் படைக்கிறார்கள். சிங்கையில் இருந்தும் கட்டுரை தயாராகி
வருகிறது.
தாங்களும் தங்கள் நாடு, மாநிலம் சார்பில் ஒரு எதிர்ப்புக் கட்டுரையை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கருணாநிதி
தனக்காக நடத்தும் செம்மொழி மாநாட்டில் எப்படி கலந்து கொள்வது என்று
யானறிந்த பல தமிழாளர்கள் கருத்து கொண்டு பங்கு பற்றத் தயங்குகிறார்கள்.
எனக்கும் அவ்வச்சம் நீங்க நாள்களாயின.
ஆதலின்,
இவ்வளவு காலத்தாழ்வான அஞ்சல். நடப்பது ஒரு தமிழ் மாநாடு. அது எனது
பணத்தில் 6 கோடி தமிழ் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது. என்
வரிப்பணத்திலேயே என் இனத்தைப் படுகொலை செய்ய எல்லா உதவியையும்
அரசாங்கங்கள் செய்தது போல, என் வரிப்பணத்திலேயே என் மொழியையும் படுகொலை
செய்ய வலிமையான முயற்சிகள் நடக்கின்றன.
யார்
நடத்துகிறார்கள் என்பதனைப் பார்க்க இதுவல்ல நேரம். களத்தில் இறங்கி
கருத்துக்களோடு மோதி அவர்களின் எண்ணங்களை முறித்துப் போடவேண்டும்.
நண்பர்களே, http://www.ulakathamizhchemmozhi.org/ என்ற இந்தத் தளத்தில் கட்டுரையாளராக, எழுத்துச் சீர்திருத்த மறுப்புக் கட்டுரையாளராக ஒரு பதிவினை இட்டு வையுங்கள்.
தற்போதைக்குச் செய்ய வேண்டியது இதுதான். 31-சனவரிக்குள் தங்கள் கருத்துக்களைக் கூட்டி
சுருக்கம் அனுப்புங்கள். 31-மார்ச்சு வரை இறுதிக் கட்டுரையை அனுப்ப காலம் இருக்கிறது.
கீழே
கொடுத்துள்ள சுட்டிகளில் மொழிப்படுகொலைக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை
ஓர்ந்து பார்த்து தாங்களோ, தங்களின் சங்கத்தைச் சார்ந்தவர்களோ, அல்லது
தாங்கள் அறிந்த சிந்தனையாளர் அல்லது அறிஞருக்கு இதனைச் சொல்லி கட்டுரை
படைக்கச் சொல்லி அவர்களை மாநாட்டில் பங்கு பற்ற வையுங்கள்.
(தமிழ்
எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் மாபெரும் சீரழிப்பு பற்றி முழு விவரங்கள் அறிய
கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கவும்.)
1)தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
2)தமிழ்
எழுத்துச் சீரமைப்பு --- http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
3)தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
***************************
தமிழா ஒன்றுபடு - தமிழால் ஒன்றுபடு - தமிழுக்காக ஒன்றுபடு
No comments:
Post a Comment