Tuesday, January 5, 2010

வைன் குடிப்பது நல்லதுதானா?

வைன் குடிப்பது நல்லதுதானா?




An apple a day keeps the doctor away என
மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு
இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.


ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.


உடல் நலத்திற்காக அல்ல!




அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.


வைனின் நல்ல பயன்கள்


உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது

புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.

இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,

வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,

நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது

என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.


வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?


அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?


அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே
தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப்
பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு
ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.



வைனில் உள்ள மதுவல்ல காரணம்



ரெஸவெடரோல் triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.




உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.



கபாலக் குத்து எனப்படும் (Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.



வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால்
மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும்
நல்லதல்ல.


வைன் என்பது உண்மையில் ஒரு மது.

மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.

உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.

அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.

ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.


இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.


எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.


எவ்வாறு அருந்துவது


இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.


அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக
இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள்
முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.


ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.


அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.


இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.





காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல்
நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக
இருப்பதே ஆகும்.




ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.


வைன் குடிப்பது அவசியமா?


மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?


நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.


ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.


ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை
மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து
சேரும்.



வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.


வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது.
அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து
தாராளமாகப் பெறலாம்.


வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.


என்ன சொல்லப் போகிறீர்கள்?


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------