2010 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் குடியரசு அதிபர் தேர்தல், ஜனவரி 26 அன்று நடந்து முடிந்துவி்ட்டது.
போட்டியில் பலர் இருந்தனர்: ஆனால், முன்னணியில் இருவரே ஓடினர்.
இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியவர்கள்.
இருவரும்
ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை
நிராகரிப்பதற்காக, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம்
முடிவெடுத்தது.
இலங்கை வரைபடத்தில் இந்த இருவரும் வெற்றி பெற்ற
மாவட்டங்களுக்கு வெவ்வேறு வண்ணம் தீட்டினால் - அது ஒரு வரலாற்றுச்
செய்தியைச் சொல்லுகின்றது.
இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது தான் அது.
சிங்களப் பகுதியில் ஏகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளவர் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டுமே தெளிவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்
பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றவர், அவரே ஒரு இனவாதியாக இருந்தும் கூட,
சிங்களப் பகுதியில் ஒரு மாவட்டத்தை கூட வெல்ல முடியவில்லை.
இந்தச் செய்தி இங்கு இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் முக்கியமானது.
தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும் வாக்குச் சீட்டை ஒர் ஆயுதமாக பயன்படுத்திய தமிழ் பேசும் மக்கள், இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள்.
தமிழ்
பேசும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துவிடக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு நிர்பந்தங்களைத் தாண்டித் தான் அவர்கள் வாக்களித்தார்கள்; தங்கள்
மன நிலையை இவ்வாறு ஒரு வரலாற்று வரைபடம் ஆக்கினார்கள்.
கடந்த அரச
அதிபர் தேர்தலில் - தமிழ் பேசும் மக்களின் ஐனநாயக உரிமையைத் தடு்த்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் என கருத்துரைத்த அனைத்துலக சமூகம்
கவனத்தில் கொள்ள வேண்டிய இடம் இது தான்.
தமிழ் பேசும் மக்களின்
பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் கூட்டை அறிவித்த போதே, பேரினவாதம் திரண்டு
அடுத்த பக்கமாகச் சாயும் என்பது எளிமையான வாய்ப்பாடாகும்.
ஜனநாயகம் பற்றிப் போதிக்கும் அனைத்துலக சமூகம், மாறவே மாட்டாத
சிறிலங்காவின் "ஐனநாயகம்" பற்றிப் பாடம் படிக்க இதனை விடவும் வேறு ஒரு
சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?
வெற்றி பெற்றவர் வாக்கு
மோசடிகளைச் செய்தோ, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, முறைகேடாக நடந்தோ
வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் - வெற்றிக்
கோட்டினை வரைந்தது பேரினவாதம் தான்.
இந்த பேரினவாதம் - இலங்கைத்
தீவின் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியா மற்றும்
பன்னாட்டுச் சமூகத்தின் விருப்பிற்கு எதிராகவும் இந்த ஆணையை அளித்துள்ளது
என்பது தான் இங்கே உள்ள பெரிய செய்தி.
இது - அனைத்துலக சமூகத்திற்கு, தமிழ் பேசும் மக்கள் மக்களின் அரசியல் வேட்கையின் நியாயத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
அனைத்துலக
சமூகம் இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - 77 வீத ஒரே இனப்
பெரும்பான்மை கொண்ட, தனது நாட்டுப் படைகளி்ல் 99 வீதம் அதே இனத்து
ஆட்ளைக் கொண்ட சிறிலங்கா போன்ற போன்ற நாடுகளில் ஐனநாயகம் என்பது
செல்லுபடியற்றது என்பதைத் தான்.
இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே பேரினவாத ஐனநாயகம் தான் வெல்லப் போகின்றது.
அறுபத்தி இரண்டு ஆண்டு கால வரலாறும் இது தான்.
அடிப்படையில்
- இலங்கைத் தீவு, இயல்பாக - இயற்கையாக - இரண்டாகவே பிளந்து கிடக்கின்றது;
ஆனால், பலவந்தமாக - செயற்கையாக - ஒன்றுபடுத்தப்பட்டு உள்ளது.
ஒரு
நீண்ட கால நோக்கில் அது எவருக்குமே - தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ,
இந்தியாவுக்கோ, அனைத்துலக சமூகத்திற்கோ - நன்மை பயக்காது.
தேர்தலில்
வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ச - தனக்கு மக்கள் அளித்துள்ள
இந்த மிகப் பெரிய ஆணை தான், தமது அரசு மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று சொல்வோருக்கான பதில் என்று சொல்லியுள்ளார்.
அதாவது
- ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிராக அதே ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கான
அதிகாரத்தையே சிறிலங்காவில் ஜனநாயகம் ஒரு பேரினவாதிக்கு வழங்குகின்றது.
அதனால் - இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் - அதன் மீது
செல்வாக்குச் செலுத்த வேண்டுமெனில் - அதனைத் தங்கள் கையிற்குள்
வைத்திருக்க வேண்டுமெனில் - தேர்தல் ஐனநாயக வழிமுறைக்கு மாற்றாக வேறு
வழிமுறைளைக் கையாள்வது பற்றி உலக சமூகம் யோசிக்க வேண்டும்.
அவ்வளவு தான்.
குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல் மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.
மற்ற மின்னஞ்சல் (Yahoo!, Hotmail) நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள் க்கு மாற்றி விட்டார்கள், என் நண்பர்கள் தற்போது 90% கூகிள் தான் (நான் இன்னும் யாஹூ வில் தான் உள்ளேன், மாற்ற இப்போதைக்கு விருப்பமில்லை). தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும் பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக (Lab) கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பலர் இது பற்றி ஏற்கனவே தெரிந்து இருப்பீர்கள், இது தெரியாத அல்லது கவனிக்காதவர்களுக்கு!
இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் Labs என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள், அதில் சில முக்கியமானவை பற்றி நான் கூறுகிறேன்.
Inserting images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும் அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.
Default 'Reply to all': ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply யும் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.
Hide Unread Counts: முன்பு தான் ஆடிக்கு ஒருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் மின்னஞ்சல் வரும், தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inbox ல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.
Right-side chat : கூகிள் உரையாடியில் (Chat) மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் Lable கள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்
Mark as Read Button: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும் எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (Unread Mails) இருப்பது எரிச்சலை தரலாம் எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (Read) மாறி விடும்.
YouTube previews in mail: இது நமக்கு Youtube சுட்டி (Link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் சுட்டியை சொடுக்கி Youtube செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி Picasa மற்றும் Flickr க்கு உண்டு.
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரக்காரர்கள் அதனால் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம்.. அப்புறம் அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo வை அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.