Sunday, February 7, 2010

அநாதை அகதி நாய் பயலுகளா : இந்தியப் பொலிசார் வார்த்தைகள்

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா
விடுதலையாம்ல வேணும், என்று கூறி தமிழ் நாட்டுப் பொலிசார் செங்கல்பட்டு
சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தழிர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேரில்
கண்டவர் ஒருவர் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்துள்ளார். கருணாநிதி
தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டமே
இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தின் கருவறுக்கத்
துணிந்துவிட்டனர். தமிழகப் பொலிசார் பேசிய விதம் பின்வருமாறு:


என்னடா
விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி
நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத்
தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த
அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை
சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான்
தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது
பேசியவார்த்தைகள்.


வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து
உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர
அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில்
தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி
கடுமையான கண்டணத்திற்குரியது, ஒவ்வொரு தமிழனும் வெட்க்கி தலைகுனியவேண்டிய
ஒன்று.


ஒரு உணர்ச்சி மிக்க இந்தியன் புலம்பல்:

இந்த தேசத்தில்,
நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால்
உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி
இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து
சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ
வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும்
காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி
விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும்
காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல்
பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால்
இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ
எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள்
இப்படித்தான் இறங்கும்.


அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில்
இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப்
பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது
போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச
தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற
நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத
இடமிருக்கிறது.


நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும்
ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து
விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள்
ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத்
துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.


நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக
இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள்
இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள்
ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????


இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு
வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள்
தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப்
பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள்
கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு??


யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும்
இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும்
கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும்,
காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி


பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது

பயன்
தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து,
ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல
லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார
ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி
மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில்
ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி
இருக்கிறது.



செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??







-- Rathish

உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...!
- சேகுவேரா[/size]

Saturday, January 30, 2010

ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்

2010 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் குடியரசு அதிபர் தேர்தல், ஜனவரி 26 அன்று நடந்து முடிந்துவி்ட்டது.

போட்டியில் பலர் இருந்தனர்: ஆனால், முன்னணியில் இருவரே ஓடினர்.

இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியவர்கள்.

இருவரும்
ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை
நிராகரிப்பதற்காக, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம்
முடிவெடுத்தது.

இலங்கை வரைபடத்தில் இந்த இருவரும் வெற்றி பெற்ற
மாவட்டங்களுக்கு வெவ்வேறு வண்ணம் தீட்டினால் - அது ஒரு வரலாற்றுச்
செய்தியைச் சொல்லுகின்றது.


இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது தான் அது.

சிங்களப் பகுதியில் ஏகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளவர் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டுமே தெளிவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்
பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றவர், அவரே ஒரு இனவாதியாக இருந்தும் கூட,
சிங்களப் பகுதியில் ஒரு மாவட்டத்தை கூட வெல்ல முடியவில்லை.

இந்தச் செய்தி இங்கு இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் முக்கியமானது.

தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும் வாக்குச் சீட்டை ஒர் ஆயுதமாக பயன்படுத்திய தமிழ் பேசும் மக்கள், இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள்.

தமிழ்
பேசும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துவிடக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு நிர்பந்தங்களைத் தாண்டித் தான் அவர்கள் வாக்களித்தார்கள்; தங்கள்
மன நிலையை இவ்வாறு ஒரு வரலாற்று வரைபடம் ஆக்கினார்கள்.

கடந்த அரச
அதிபர் தேர்தலில் - தமிழ் பேசும் மக்களின் ஐனநாயக உரிமையைத் தடு்த்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் என கருத்துரைத்த அனைத்துலக சமூகம்
கவனத்தில் கொள்ள வேண்டிய இடம் இது தான்.

தமிழ் பேசும் மக்களின்
பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் கூட்டை அறிவித்த போதே, பேரினவாதம் திரண்டு
அடுத்த பக்கமாகச் சாயும் என்பது எளிமையான வாய்ப்பாடாகும்.
ஜனநாயகம் பற்றிப் போதிக்கும் அனைத்துலக சமூகம், மாறவே மாட்டாத
சிறிலங்காவின் "ஐனநாயகம்" பற்றிப் பாடம் படிக்க இதனை விடவும் வேறு ஒரு
சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?

வெற்றி பெற்றவர் வாக்கு
மோசடிகளைச் செய்தோ, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, முறைகேடாக நடந்தோ
வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் - வெற்றிக்
கோட்டினை வரைந்தது பேரினவாதம் தான்.

இந்த பேரினவாதம் - இலங்கைத்
தீவின் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியா மற்றும்
பன்னாட்டுச் சமூகத்தின் விருப்பிற்கு எதிராகவும் இந்த ஆணையை அளித்துள்ளது
என்பது தான் இங்கே உள்ள பெரிய செய்தி.

இது - அனைத்துலக சமூகத்திற்கு, தமிழ் பேசும் மக்கள் மக்களின் அரசியல் வேட்கையின் நியாயத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

அனைத்துலக
சமூகம் இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - 77 வீத ஒரே இனப்
பெரும்பான்மை கொண்ட, தனது நாட்டுப் படைகளி்ல் 99 வீதம் அதே இனத்து
ஆட்ளைக் கொண்ட சிறிலங்கா போன்ற போன்ற நாடுகளில் ஐனநாயகம் என்பது
செல்லுபடியற்றது என்பதைத் தான்.

இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே பேரினவாத ஐனநாயகம் தான் வெல்லப் போகின்றது.

அறுபத்தி இரண்டு ஆண்டு கால வரலாறும் இது தான்.

அடிப்படையில்
- இலங்கைத் தீவு, இயல்பாக - இயற்கையாக - இரண்டாகவே பிளந்து கிடக்கின்றது;
ஆனால், பலவந்தமாக - செயற்கையாக - ஒன்றுபடுத்தப்பட்டு உள்ளது.

ஒரு
நீண்ட கால நோக்கில் அது எவருக்குமே - தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ,
இந்தியாவுக்கோ, அனைத்துலக சமூகத்திற்கோ - நன்மை பயக்காது.

தேர்தலில்
வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ச - தனக்கு மக்கள் அளித்துள்ள
இந்த மிகப் பெரிய ஆணை தான், தமது அரசு மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று சொல்வோருக்கான பதில் என்று சொல்லியுள்ளார்.

அதாவது
- ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிராக அதே ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கான
அதிகாரத்தையே சிறிலங்காவில் ஜனநாயகம் ஒரு பேரினவாதிக்கு வழங்குகின்றது.
அதனால் - இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் - அதன் மீது
செல்வாக்குச் செலுத்த வேண்டுமெனில் - அதனைத் தங்கள் கையிற்குள்
வைத்திருக்க வேண்டுமெனில் - தேர்தல் ஐனநாயக வழிமுறைக்கு மாற்றாக வேறு
வழிமுறைளைக் கையாள்வது பற்றி உலக சமூகம் யோசிக்க வேண்டும்.

அவ்வளவு தான்.

என் அருமைத் தமிழ் மக்களுக்கு,

என் அருமைத் தமிழ் மக்களுக்கு,


முத்துக்குமார் எழுதுவது,


நலம், நலம் அறிய ஆவல் என்று என்னால் எழுத
முடியாது. ஏனென்றால் நான் இறந்துபோய் விட்டேன். எனக்கு வயது 29, சினிமா
உதவி இயக்குனராகவும், பத்திரிக்கையாளனாகவும் பணியாற்றினேன்.
திருமணமாகவில்லை. அம்மா இல்லை, அப்பா திருமணமான சகோதரி உண்டு.


கடந்த ஜன-29 (2009) அன்று
உங்களுக்கெல்லாம் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எனது உயிரை
அழித்துக்கொண்டேன். எனது கடிதம் உங்களுக்கெல்லாம் கிடைத்ததா? நான் செய்தது
தற்கொலை அல்ல. தீர்க்க முடியாத கடனாலோ, தீராத நோயினாலோ, காதல் பிரிவின்
துயரத்தாலோ நான் என்னை அழித்துக்கொள்ளவில்லை. உங்களை விழிக்க வைக்கவே
என்னை அழிக்க நினைத்தேன்.


சினிமா பார்க்கவும் டி.வி.பார்க்கவும்,
கிரிக்கெட் பார்க்கவும் அன்றாட வேலைகளை பார்க்கவும் நீங்கள் விழித்தேதான்
இருக்கிறீர்கள். இருந்தும் நீங்கள் விழிக்காமல் போனது சகமக்களின்
துன்பங்களை பார்க்க என எண்ணுகிறேன். நமக்கு உணவளிக்கும் காவேரி,
முல்லைப்பெரியாறு விவசாயிகளின் துன்பங்களை எண்ணிப்பார்க்க
மறந்திருக்கிறோம். நமக்காக மீன்பிடிக்கச் சென்று சிங்கள இராணுவத்தால்
சுட்டுக் கொல்லப்பட்ட 500 மீனவர்களின் வாழ்வை எண்ணிப்பார்க்க
மறந்திருக்கிறோம்.


இந்த வழக்கத்தில்தான் காப்பற்றச் சொல்லி
நம்மை நோக்கி கத்திக் கதறினார்களே பெண்களும், குழந்தைகளும்,
முதியவர்களுமாய் தமிழீழ மக்கள், அந்த மக்களின் துன்பங்களைக்கூட
ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்நிலையில் தான் நான் என் உயிரை தீயிட்டு
அழித்தேன். யார் இவன்? எதற்காக உயிரை அழித்துக்கொண்டான்? என்று உங்கள்
கவனம் என் பக்கம் திரும்பும், அப்படியாவது உங்கள் கவனம் ஈழமக்கள் பக்கம்
திரும்ப வேண்டும் என்பதே எனது மரணத்தின் நோக்கம்.


செய்தியறிந்த மாணவர்கள், இளைஞர்கள்
ஈழத்தின் பக்கம் திரும்பினார்கள். எனது மரணத்தின் செய்தி உங்கள்
அனைவருக்கும் சேரா வண்ணம் அரசியல் இலாபங்களுக்காக பலர் அதை
மட்டுப்படுத்தினார்கள். எனக்குப் பிறகு 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 பேர். அதன் பிறகும் உங்கள் கவனம்
ஈழமக்கள் பக்கம் திரும்பாததால் கடைசியில் எல்லோரும் பயந்தபடியே
ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டே விட்டார்கள்.


போர் தான் முடிந்ததே, விட்டார்களா என்ன?.
போரில் மிஞ்சிய பொதுமக்கள் 3.5 இலட்சம் பேரையும் கைது செய்தார்கள்.
அத்தனைபேருக்கும் முள்வேலியால் பிரம்மாண்ட சிறை செய்தார்கள். பெயருக்கு
பதிலாக அனைவருக்கும் நம்பர் போட்டு இழிவுபடுத்தினார்கள்.
இளைஞர்களையெல்லாம் கொல்லக் கூப்பிட்டுப் போய்விட்டார்கள். உச்சக்கட்ட
பட்டினி போட்டு தமிழ் பெண்களின் உடலை சோற்றுக்கு விலைபேசி விட்டார்கள்.
போரின் இறுதி 48 மணி நேரத்தில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.


இச்செய்தியைக் கூட ஈழத்தில் இருந்து 10
மைல் தொலைவிலுள்ள தமிழக தொலைக்காட்சிகளோ, செய்தித்தாள்களோ வெளியிடவில்லை.
பல ஆயிரம் மைல் தள்ளியிருக்கும் டைம்ஸ் என்ற உலக புகழ்பெற்ற ஆங்கில இதழ்
வெளியிட்டது. இந்த நேரங்களிலும் கூட நமது தொலைக்காட்சிகள் சிரி சிரி,
சிரிப்பொலி, சிரிப்பு வருது.... என்றெல்லாம் காட்டி நம்மை சிரியாய்
சிரிக்க வைக்கிறார்கள். அந்த பக்கம் மனிதநேயம் நம்மைப் பார்த்து சிரியாய்
சிரிக்கிறது.


விவரம் அறிந்த ஐரோப்பிய இனத்தவர்கள்
கேட்கிறார்கள். 6.5 கோடி தமிழர்கள் பக்கத்தில் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்களுக்கு எப்படித்தெரியும்.! நாமெல்லாம்
தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்ல, சன்டிவியின் தமிழ்மாலையால்
வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது! என் அருமைத் தமிழ் மக்களே, என்ன செய்தால்
நீங்கள் ஈழமக்கள் பக்கம் திரும்புவீர்கள் என எனக்கு தெரியவில்லை. மீண்டும்
எனது உயிரை மாய்த்து உங்களுக்கு செய்தி சொல்ல என்னிடம் இன்னொரு உயிர்
இல்லை. விழியுங்கள், இப்போதாவது விழியுங்கள், ஈழமக்களின் வேதனைகளை
ஏறெடுத்துப்பாருங்கள்.


பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை
இழந்த பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரமாய்; கணவரை இழந்த மனைவியர், மனைவியரை இழந்த
கணவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; உயிரோடு இருந்தும் கை, கால்கள், கண் என
உடலுறுப்புகள் பல இழந்து நடைபிணமாய் வாழ்பவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; போதும்
இத்தோடு எல்லாம் போதும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை இரண்டு
இலட்சத்தோடாவது தடுத்து நிறுத்துவோம்.


என்ன செய்யலாம் இதற்காக? ஒன்றே ஒன்று
செய்வோம் இதற்காக, நாம் அன்றாடம் பல செய்திகளை முணுமுணுப்பது போல
ஈழமக்களுக்காக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களிடம்
முணுமுணுப்போம். அது போதும் 6.5 கோடி மக்களின் முணுமுணுப்பு என்பது
பேரிரைச்சல் அல்லவா? இப்பேரிரைச்சல் ஈழ விடுதலையை உலகின் செவிகளில் ஓங்கி
ஒலித்துவிடும். உங்களுக்காக உயிர் கொடுத்தவன் என்ற உரிமையில் உங்கள்
உணர்வுகளை நான் புண்படுத்தி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும்.


இப்படிக்கு

இறந்தும் உங்களுடன் வாழும்


முத்துக்குமார்

Tuesday, January 26, 2010

கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!

குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல் மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.

மற்ற மின்னஞ்சல் (Yahoo!, Hotmail) நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள் க்கு மாற்றி விட்டார்கள், என் நண்பர்கள் தற்போது 90% கூகிள் தான் (நான் இன்னும் யாஹூ வில் தான் உள்ளேன், மாற்ற இப்போதைக்கு விருப்பமில்லை). தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும் பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக (Lab) கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பலர் இது பற்றி ஏற்கனவே தெரிந்து இருப்பீர்கள், இது தெரியாத அல்லது கவனிக்காதவர்களுக்கு!

இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் Labs என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள், அதில் சில முக்கியமானவை பற்றி நான் கூறுகிறேன்.


Inserting images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும் அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.



Default 'Reply to all': ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply யும் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.



Hide Unread Counts: முன்பு தான் ஆடிக்கு ஒருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் மின்னஞ்சல் வரும், தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inbox ல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.



Right-side chat : கூகிள் உரையாடியில் (Chat) மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் Lable கள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.



Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்




Mark as Read Button: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும் எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (Unread Mails) இருப்பது எரிச்சலை தரலாம் எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (Read) மாறி விடும்.



YouTube previews in mail: இது நமக்கு Youtube சுட்டி (Link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் சுட்டியை சொடுக்கி Youtube செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி Picasa மற்றும் Flickr க்கு உண்டு.



Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரக்காரர்கள் அதனால் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம்.. அப்புறம் அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo வை அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.

மேற்கூறியவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

Monday, January 25, 2010

MS WORD WATERMARK TEX இணைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

MS WORD WATERMARK TEX இணைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

உங்கள் pendrive இல் Adobe photoshop CS


போட்டோ
இமேஜ் எடிட் செய்ய பயன்படும் மென்பொருட்களில் அநேகமானவர்களால்
பயன்படுத்தப்படுவது Adobe photoshop என்ற மென்பொருள் ஆகும். இந்த Adobe
photoshop மென்பொருளை நாமும் நம்முடைய
கணினியில் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால்
நாம் சில நேரங்களில் நம்முடைய நண்பர்களின் கணணியையோ அல்லது browsing
center இல் உள்ள கணணியை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஆனால்
அங்கு Adobe photoshop மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்காது.
அத்துடன் மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும் Administrator உரிமம் lock
செய்யப்பட்டிருக்கும். இதனால் உங்களிடம் photoshop மென்பொருள் இருந்தாலும்
நீங்கள் அதை இன்ஸ்டால் செய்ய முடியாது. ஆனால் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒரு
Adobe photoshop மென்பொருளை உங்கள் pendrive இல் வைத்திருந்தால் நீங்கள்
எந்த கணனியில் வேண்டுமானாலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே
இயக்கலாம். உங்களுக்காக Adobe photoshop CS என்ற மென்பொருள் pendrive இல்
வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது. இந்த மென்பொருளை
தரவிறக்கி அதை unzip செய்து உங்கள் pendrive இல் copy செய்து பின்பு
அதனுள் உள்ள Portable_PS_8.exe என்ற file ஐ open செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பு
இந்த மென்பொருளை pendrive இல் வைத்து இயக்குவதை விட pendrive இல்
கொண்டுசென்று அதனை உங்களுக்கு photoshop தேவைப்படும் கணனியின் desktop இல்
past செய்து கணனியிலிருந்து open செய்தால் வேகமாக இயங்கும்...
மென்பொருளைத் தரவிறக் இங்கே அழுத்தவும்
-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------