Saturday, April 3, 2010

தமிழில் Firefox


இணையதள உலாவியான Firefox தற்போது தமிழ் மொழியில் உலாவியை
அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக தாய்மொழி அறிவு மட்டும் பெற்றிருக்கும்
பலருக்கும் பயன்படும் வகையில் எல்லா நிறுவனங்களும் மாநில மொழிகளை தங்கள்
படைப்புகளுடன் வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கும் தமிழ் -
சமூக இணைப்பு தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் என எல்லாம்
தமிழுக்கு முக்கியத்துவம் கொடு்த்து மாறியிருக்கின்றன. நோக்கியா போன்ற
கைப்பேசி நிறுவனங்கள் முன்பே தமிழை அறிமுகப்படுத்திவிட்டன.

இணைய உலாவி -
இப்போது இணைய உலாவியும் தமிழில் வந்துவிட்டது. கோப்பு, சேவையாக்கு,
நோக்குக, வரலாறு, புத்தகக்குறிகள், கருவிகள், உதவி என டூல்பாரில் தமிழை
காணும் போது மகிழ்வாக இருக்கிறது. தமிழ் இனி மெல்ல சாகும் என வருத்தம்
கொண்ட கவி இல்லையே, இருந்திருந்தால் பாடல் திருத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி, நகலேடுக்க, சாரத்தினை திறக்க, கருவிப்பட்டை, பக்கப்பட்டை என கணினி தமிழ் விளையாடுகிறது.
தரவிரக்க -
இந்த தமிழ் Firefox உலாவியை தரவிரக்க இங்கு சொடுக்கவும்.
மற்ற மொழிகளிலுள்ள Firefoxஇன் பதிப்புகள் எல்லாவற்றையும் இங்கே காணலாம்

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------