Thursday, February 25, 2010

போடோஷாப் கற்போம் பாகம்-2

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நண்பர்களே நாம் பாகம் 1ல் போட்டோஷாப் அறிமுகமும் Tools பற்றியும் பார்த்தோம் இனி இந்த Toolsகளின் மிக முக்கியமானதும், அதிகமாக உபயோகிக்கும் Toolsகளைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

Rectangular Marquee Tool


இந்த Toolளை நாம் படத்தின் எங்களுக்கு தேவையான பகுதியோ அல்லது முழு படத்தையோ தேவையாயின் அதை வெட்டி (Cut) எடுக்க உதவுகின்றது. இதன் உள்ளே நான்கு Tool இருக்கின்றன இந்நான்கு Toolகளிலும் இரண்டு Toolsதான் அதிகம் பயன் படுதுவோம் இந்த Toolsகளைக் காண அதன் மேல் Right Click செய்தால் மேற்கண்டவாறு தோன்றும். Rectangular Marquee Toolளைப் போலவே Elliptical Marquee Tool இப்போ உங்களுக்கு விருப்பமான படத்தொன்றை ஓபின் பண்ணவும் File-Open-Select your Picture பிறகு Rectangular Marquee Tool தெரிவு செய்து உங்களுக்கு வேண்டிய பகுதியை அதன் மூலம் தெரிவு செய்க. அதன் பின் Right Click செய்யவும்




அதன் பின்னர் உங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம் தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லையெனின் இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது மறைந்து விடும் இதற்கு Shortcut key Ctrl + D. அடுத்து உள்ள Select Inverse. நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில் கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல் செலக்ட் செய்துள்ளேன். அடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.


(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்திருப்பதைப் பார்திருப்பீர்கள். அதை இவ்வாறும் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம்.



Feather என்றால் இறகு என்று பொருளாகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும் இதற்கு Shortcut key Alt+Ctrl +D உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Radius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். கீழ்க்காணும் படத்தை நோக்குக.



அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 25 வைத்துள்ளேன்.


நாம் 25 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.



அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ் கொடுக்கும் போது நீங்கள் தெரிவு செய்து cut பண்ணும் படத்தின் ஓரங்களில் Feather குறைவாக காணப்படும். நீங்கள் செய்து பார்க்கும்போது அதன் வித்தியாசங்களை உணர்வீர்கள்.



மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால்தான் அடுத்து இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கின்றேன்.


இனி அடுத்த பாகத்தில் சந்திப்போம் உங்களுடைய கருத்துக்களை பதிய மறக்காதீர்கள்.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------